12-step programs
பன்னிரண்டு விதிமுறைகள்
தமிழ் விளக்கம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் (Alcoholics Anonymous - AA), சூதாடிகளின் அனானிமஸ் (Gamblers Anonymous - GA)) மற்றும் பேட்டரர்ஸ் அனானிமஸ் (Batterers Anonymous - BA) போன்ற சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளைத் தீர்மானித்த, சிறுகச் சிறுக வாழ்க்கையை மேம்படுத்த பின்பற்றப்பட்ட 12 விதிமுறைகள். இது ஆல்கஹாலிக் அனானிமஸின் நிறுவனரால் (பில் மற்றும் பாப்), பைபிளில் இருக்கும் 12 நம்பிக்கையாளர்களைக் குறிப்பதற்காக, 12 என்ற எண் பயன்படுத்தப்பட்டது. பாரதியாரின் கவிதை போல, 'பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள். பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள். துயரிலாதெனைச் செய்துவிட்டாள். துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்' என்றபடி இந்த 12 விதிமுறைகள் அதைப் பின்பற்றியவர்களிடத்தில் பெரிய மன மாற்றத்திற்கு வித்திட்டது.
வருடத்துக்கு 20 லட்சம் மக்கள் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸை நாடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களை ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் மதுவிலிருந்து காத்திருக்கிறது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸால் அனைவரையும் குணப்படுத்தமுடியவில்லை. மேலும் பங்கேற்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், அதன் வெற்றியை சரியாகத் தீர்மானம் செய்து கூறுவதும் கடினமாக உள்ளது. மதுப்பழக்கத்தைத் தவிர போதை, கடன், உடல்பருமன், புகைப்பிடித்தல், வீடியோகேம் அடிக்ஷன், என்று பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் தோள் கொடுக்கிறது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸின் வழிமுறைகள், பலவகைகளில் வெற்றிகரமான மாற்றங்களுக்கு வழியைக் காட்டுகிறது. அறிவியலின் அடிப்படையில் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸின் வழிமுறைகள் அமைக்கப்படவில்லை என்றாலும், அந்த அமைப்பு அடைந்த, அதில் பங்கேற்ற உறுப்பினர்கள் அடைந்த வெற்றியை யாராலும் மறுக்கமுடியாது. இந்த வெற்றிக்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் 12 விதிமுறைகள். அவையாவன. 1. நான் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனையைத் தீர்க்கவியலாத இயலாமையை நான் ஒப்புக்கொள்கிறேன். 2. இப்பிரச்சனையிலிருந்து மீள ஒரு உயர் சக்தியின் உதவி தேவை என்பதை நான் உளமாற உணர்கிறேன். 3. அந்த உயர் சக்தி கடவுள் என்பதாக உணர்ந்து அவரிடம் நான் சரணாகதி அடைகிறேன். 4. என்னை நான் புரிந்துகொள்வதற்குத் தொடர்ந்து முயல்வேன் 5. நான் இதுவரை செய்த தவறுகளுக்காக எனக்கு அருகாமையிலிருப்பவர்களிடமும், இறைவனிடமும் மனதார மன்னிக்க வேண்டுகிறேன் 6. என்னிடமிருக்கும் குறைகளைக் களைய ஆண்டவனோடு ஒத்துழைக்க சித்தமாயிருக்கின்றேன். 7. என்னுடைய குறைகளை ஆண்டவன் நீக்க பணிவுடன் இறைஞ்சுகிறேன் 8. என்னால் பாதிப்புக்கு உள்ளான அனைவரின் இழப்புக்களுக்கும் ஈடுகட்ட நான் தயாராயுள்ளேன் 9. என்னால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நான் நேரடியாகவே பரிகாரம் செய்யத் தாயாராய் உள்ளேன். 10. என்னுடைய தவறுகளைத் தொடர்ந்து கண்காணித்து, பட்டியலிட்டு அதை நான் ஒப்புக்கொள்வேன் 11. பிரார்த்தனையின் மூலமும், தியானத்தின் மூலமும் கடவுளைத் தொடர்பு கொண்டு என்னைப் புரிந்துகொண்டு என்னை மேம்படுத்த மன்றாடுவேன். 12. என்னைப் போன்று பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இச் செய்தியை, அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வேன்.

English
The central activity of many self-help organizations, such as Alcoholics Anonymous (AA), Gamblers Anonymous (GA), and Batterers Anonymous (BA), that asks members to proceed through 12 incremental activities. Although each organization modifies the steps slightly to suit its needs, the basic activities are (1) acknowledge powerlessness with the problem; (2) recognize the need for help from a higher power; (3) decide to turn one's life over to God as one understands Him; (4) make a searching self-inventory; (5) admit to God, oneself, and one other person the exact nature of the wrongs done; (6) be ready to have God remove character defects; (7) humbly ask God to remove shortcomings; (8) list all people harmed and be willing to make amends; (9) make direct amends whenever possible; (10) continue to make personal inventory and admit one's wrongs; (11) seek improvements through prayer and meditation in contact with God as one understands Him; and (12) carry this message to others with the same problem.