4-H club
4 H சங்கங்கள்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் வேளாண்மைத் துறையின் உணவு மற்றும் வேளாண்மைக்கான தேசியக் கல்லூரியினால், இளைஞர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்ந்து, அவர்களின் ஆளுமை மேம்பாட்டிற்காக நடத்தப்படும் நாடு தழுவிய இளைஞர் இயக்கம். இப்போது அமெரிக்காவையும் கடந்து விவசாயத்திலோ வீட்டுவேலைகளிலோ ஈடுபட்டிருக்கும் இளைஞர்களின் மேம்பாட்டிற்காகப் பலநாடுகளிலும், அந்தந்த நாட்டு அரசுகளாலோ தொண்டு நிறுவனங்களாலோ நடத்தப்படும் சர்வதேச அமைப்பாக வளர்ந்துள்ளது. 4 H club என்பது மனித ஆளுமையின் நான்கு பரிமானங்களை 1. Head (தலை - அறிவு) 2. Heart (இதயம் - அன்பு), 3. Hands (கைகள் - உடல் உழைப்பு, உதவி செய்தல்), 4. Health (ஆரோக்கியம்) உள்ளடக்கியது. அமெரிக்காவில் மட்டும் 5-21 வயதுள்ள 65 இலட்சம் இளைஞர்கள், ஏறக்குறைய 90000 கிளப்புகளில் உறுப்பினராகி செயல்படுகின்றனர்
English
An international organization for young people interested or involved in agriculture or homemaking through the development of one's head, heart, hands, and health.