638S
6385
தமிழ் விளக்கம்
அமெரிக்க பூர்வீக இந்தியக் குடிகளின் சுய உரிமை மற்றும் கல்வி உதவிச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்ட சமூக நலத் திட்டங்களையும், கல்வி நிறுவனங்களையும் குறிக்க உபயோகப்படுத்தப்படும் நிர்வாகக் குறியீடு. அமெரிக்க இந்திய விவகாரங்களுக்கான பணியகம் அமல்படுத்தி வந்த சமூகநலத் திட்டங்களையும், கல்விப் பணியையும் அமெரிக்க இந்திய நிறுவனங்களின் மூலம் நிர்வகிக்கவும், ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகளைச் செய்யவும் ஏதுவாகக் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் எண்ணான PL 93638 குறியீட்டைக்கொண்டு குறிக்கப்படுகிறது.
பார்க்க: Bureau of Indian Affairs (BIA) - இந்திய விவகாரங்களுக்கான பணியகம் - அமெரிக்காவில் வாழும் இந்தியப் பூர்வகுடிகள் மற்றும் அலாஸ்கா பூர்வகுடிகளுக்கான சமூக சேவைகள், மருத்துவ உதவி, கல்வி உதவி, வேளாண்மை மற்றும் பொருளாதார உதவிகள், மனித உரிமைப்பாதுகாப்பு போன்ற திட்டங்களையும், சேவைகளையும் கவனித்துக்கொள்ள, 1824 ஆம் ஆண்டு அமெரிக்க உள்துறையால் உருவாக்கப்பட்ட மத்திய அரசு நிறுவனம்.

English
The commonly used term for Native American social services and educational organizations that implement provisions of the Indian Self-Determination and Education Assistance Act. The term comes from the 1975 federal legislation (P.L. 93638) that removed most of the direct social services and educational functions from the Bureau of Indian Affairs (BIA) and permitted certain Native American organizations to provide such services or to contract for them.