AAISW

தொழிலகங்களில் பணிபுரியும் சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க சங்கம்

தமிழ் விளக்கம்

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பணிசார்ந்த உதவிகளைச் செய்து தரும் சமூகப்பணியாளர்களுக்கான சங்கம். பணியாளர்களின் பணித்திறனைப் பாதிக்கும் உடல் மனநலப் பிரச்சனைகள், பணியிட உறவுகள், பணியின் மீதான கவனத்தை திசைதிருப்பும் குடும்ப நிகழ்வுகள் / பொறுப்புகள், நிதிநிலைமை மற்றும் பிற சிக்கல்கள் போன்றவற்றில் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லவும், முடியும் பட்சத்தில் அதைத் தீர்க்கவுமான சேவைகள் இதிலடங்கும்.

English

American Association of Industrial Social Workers (AAISW). The organization of professional social workers who provide occupational social work services through employment with business organizations or through employee assistance programs (EAPs). It develops and maintains standards of quality assurance and encourages the effective use of industrial social workers.