AARP
ஓய்வு பெற்றவர்களுக்கான அமெரிக்க சங்கம்
தமிழ் விளக்கம்
எதல் பெர்சி ஆன்றஸ் என்ற அம்மையாரால், 50 வயதைக் கடந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அமெரிக்காவின் மிகப்பெரிய சமூக, அரசியல் முக்கியத்துவம் பெற்ற இந்த அமைப்பு, 3.8 கோடி உறுப்பினர்களைக் கொண்டது. இந்த அமைப்பு இரு பிரிவுகளாகச் செயல்படுகிறது. AARP சேவைகள் (AARP Services) என்பது இலாபநோக்குடன் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகனம் மற்றும் இல்லக் காப்பீடு போன்ற சேவைகளிலும், மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பரிந்துரைப்பது, சுற்றுலா ஏற்பாடு போன்ற வர்த்தக சேவைகளில் ஈடுபடுகிறது. AARP அறக்கட்டளை (AARP Foundation) எந்தவொரு முதியோரும் இடர்ப்பாடில்லாத வாழ்க்கை வாழ்வதற்கேற்ற, வறுமையற்ற நாட்டை உருவாக்கத் தேவையான கொள்கைகளை வடிவமைப்பதற்கேற்ப அரசியல் அழுத்தம் கொடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
English
American Association of Retired Persons (AARP). The largest senior citizens' group in the United States, founded in 1958 to influence legislation and provide social, economic, and recreational services to people older than 50 (retired or not).