AASW
அமெரிக்க சமூகப் பணியாளர்கள் சங்கம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க சமூகப் பணியாளர்கள் சங்கம், தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனத்துடன் இணைந்த உறுப்பு சங்கமாகும். 1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்கக் குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான தேசிய சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் அமெரிக்க சமூகப் பணியாளர்களுக்கான சங்கமாகும்.
பார்க்க: American Association of Social Workers - அமெரிக்க சமூகப் பணியாளர்கள் சங்கம் - Asian American Social Workers (AASW) - ஆசிய அமெரிக்க இனத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர்கள் - ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த, அமெரிக்காவில் சமூகப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களால், 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட சங்கம். ஆசிய அமெரிக்கர்களின் நலன் பேண சமூக நலத் திட்டங்களை முன்னெடுப்பதும், அவர்களுக்குக் கலாச்சாரப் பொருத்தமுடைய சேவைகளை வழங்க சமூகப்பணியில் திறன் வளர்த்துக்கொள்ளவதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

English
1. See American Association of Social Workers (AASW). 2. See Asian American Social Workers (AASW).