AASWG

குழுக்களுடனான (Group Work) சமூகப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைப்பு

தமிழ் விளக்கம்

குழுக்களுடனான சமூகப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான இந்த அமைப்பு, தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனத்துடன் இணைந்த உறுப்பு சங்கமாகும். 1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்கக் குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான தேசிய சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் குழுக்களுடனான (Group Work) சமூகப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைப்பு.

English

See Association for the Advancement of Social Work with Groups (AASWG).