abandonment
கைவிடல், விட்டு விடுதல், கவனிக்காது விடுதல், கைகழுவி விடபட்ட
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னுடைய உடமைகள், உரிமைகள், பொறுப்புகளைத் தானாக முன்வந்து பின்னெப்போதும் அதன்மீது உரிமை பாராட்ட விரும்பாமல் விட்டுவிலகுவது. அவ்வாறு விட்டு விட்டவைகளின் மீது சட்ட ஒப்புதலுக்கேற்ப பிறர் உரிமை கொண்டாட முடியும். குடும்ப வாழ்வில் அக்கறையற்று, கவனிக்காதிருக்கும் போக்கு விவாகரத்திற்கும், குழந்தைகளின் பாதுகாவலர் என்ற உரிமை இழப்பிற்கும் இட்டுச் செல்லும்.
English
Voluntarily giving up one's possessions, rights, or obligations with no intention of subsequently reclaiming them. In most jurisdictions, abandonment enables others to claim the surrendered property or rights. Abandonment of one's family, in most states, can be used as grounds for divorce or loss of custody of children, or both.