ABE

வயது வந்தோருக்கான அடிப்படைக் கல்வித்திட்டம்

தமிழ் விளக்கம்

எழுத்தறிவற்ற வயது வந்தோரை முறையான கற்றல் அனுபவத்திற்கு உட்படுத்தி, புதிய அறிவையும், திறமைகளையும், அணுகுமுறைகளையும், மதிப்பீடுகளையும் கற்றுத் தருவது வயது வந்தோருக்கான கல்வியியல் (androgogy) முறையாகும். இது பொதுவான ஆசிரியரியல் (pedagogy) முறைகளிலிருந்து மாறுபட்டது. வயது, பணியிடத்திலே கற்றல், விரிவாக்கக் கல்வி, தொடர்கல்வி, சமுதாயக் கல்வி, விழிப்புணர்வுக் கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாடு என்று வந்தோருக்கான கல்வியின் முறைகள் பலவகைப்பட்டது.
கல்வி மனிதரைச் சமூக வாழ்வில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கத் தயாரிப்பதால், கல்வி கற்க வாய்ப்பற்ற, கல்வித் திறன் குறைந்த வயது வந்தவர்களுக்காக நடத்தப்படும் வகுப்பறை சார்ந்தும், தனிமுறைப் போதனைகளும் உள்ளடக்கியதே வயது வந்தோருக்கான அடிப்படைக் கல்வித் திட்டம்.

English

Adult Basic Education program (ABE). Tutoring and classroom teaching programs for adults with educational deficiencies, sponsored by the U.S. Department of Education; also referred to as ABE–OE programs.