abnormal

இயற்கைக்கு மாறான, நியதிக்கு மாறான, வழக்கத்திற்கு மாறான, நெறிபிறழ்ந்த

தமிழ் விளக்கம்

இந்த வார்த்தை பொதுவாக இயல்பற்ற, இணக்கமற்ற, வழக்கத்திற்கு மாறான நடத்தையைக் குறிக்கும். சமூகப்பணியில் இது நடத்தையைக் குறிக்கும் சொல்லாட்சியே தவிர மனிதர்களைக் குறிப்பதன்று. இயல்பானது, இயல்பற்றது என்று தெளிவாக வரையறுக்க முடியாவிட்டாலும், அது தொடர் தன்மை (continum) வாய்ந்தது. ஒரு நடத்தை இயல்பற்றது என்ற தீர்மானித்திற்கு வருமுன், சமூகப்பணியாளர்கள் உள நோய்களுக்காண அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு மற்றும் மனிதரில் சுற்றாடலின் விளைவுகள் பற்றிய பாரபட்சமற்ற விளக்கத்தைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பன்முகச் சமூகங்களில் சிறுபான்மையினரின் நடத்தை ஒழுக்கலாறுகள் பெரும்பாலும் இயல்பற்றதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

English

A term denoting atypical functioning that usually is seen as maladaptive. In social work, the term usually refers to behavior rather than a person. There is rarely a clear and consistent demarcation between normal and abnormal, but rather a continuum. In assessing whether a behavior is abnormal, social workers apply objective criteria such as those found in DSM-IV or the Person-in-Environment System (PIE System). In a pluralistic society, behaviors of people in minority groups are more often defined as abnormal than those of the majority.