abortion
கருக்கலைப்பு, கருப்பச்சிதைவு, கருக்கலைப்பு, கருவழிவு, உருவாகாத கருச் சிதைந்துவிழுகை
தமிழ் விளக்கம்
கருக்கலைப்பு (Abortion) என்பது முளைக்கரு அல்லது தொடக்கநிலையிலுள்ள கரு (embryo) அல்லது முதிர்கருவைக் (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதலாகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே முளையம் அல்லது முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு (Miscarriage) அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு (Spontaneous Abortion) எனப்படும்.
ஏதேனும் ஒரு மருத்துவக்காரணம் கருதி (தாயின் நலம் கருதி) உண்டாக்கப்படும் கருக்கலைப்புச் சிகிச்சை கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காகச் செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு (Selective Abortion) எனப்படும். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடவோ அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ பொதுவாகக் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்ற காரணங்கள் தேர்வு அல்லது தூண்டப்படும் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், தவறான முறையில் உடலுறவு கொண்டு கருத்தரிந்திருந்தாலும் இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.
(சவறுவிழுதல், கருப்பம் நிரம்பாது வெளிப்படுகை, நஞ்சுகரையல், கருப்பங் கரைகை, பிள்ளைவிழுதல், கருச்சிதைந்து வெளிப் படுகை, விச்சின்னம், இடையிற் சிதைவுறுகை, கருச்சிதைவு, கர்ப்பபாதம், பிண்டம்விழுதல்)

English
Termination of pregnancy before the fetus has developed enough to survive outside the woman's body. The term usually refers to a deliberate procedure to end the pregnancy. However, many pregnancies also are lost through natural or spontaneous abortions (miscarriages) in which the woman’s body rejects the fetus. See also Roe v. Wade, prochoice movement, and right-to-life movement.