abreaction

அழுத்தப்பட்ட கருத்தை வெளியிடல், பட்டறிவை உணர்வோடு வெளிப்படுத்தல்

தமிழ் விளக்கம்

உளப்பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட உளப்பிணி சிகிச்சை முறைகளில், ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்ட வலி தரும் அல்லது ஒன்றுக்கொன்று இணக்கமற்று அகமோதலுக்குக் காரணமான சிந்தனைகளை நனவு நிலைக்கு கொண்டுவருவதன் மூலம் மனத்தெளிவையோ அல்லது எதார்த்தத்தை உணர வைத்தோ புதிதான சமாளிக்கும் உத்திகளைக் கையாளக் கற்றுத்தந்து பதட்டம் தணிக்கும் அணுகுமுறை.
பார்க்க: catharsis - தூய்மைப்பேறு, அகத்தூய்மைப்பேறு, உளமீட்சி, அடக்கப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துவதால் ஏற்படும் மனத் தூய்மை / மனம் இலகுவாதல் -
ஒருவர் தன்னுடைய கருத்துக்கள், அச்சங்கள், கடந்த கால நிகழ்வுகள், சகவாசங்களை வாய்மொழியாகச் சொல்லும்போது அவருடைய மனஇறுக்கம் மற்றும் பதட்டம் தணிந்து மனம் இலேசாகி அவருடைய செயல்படு திறன் அதிகரிக்கும் என்ற கருத்து.

English

A process, used in some forms of psychotherapy, especially psychoanalytically oriented ones, by which repressed material, particularly a painful experience or a conflict, is brought back to consciousness. A therapeutic effect sometimes occurs through partial discharge or desensitization of the painful emotions and increased insight and also, by the development of new coping strategies. See catharsis.