absolute poverty

முழுமையான வறுமை, உயிர் வாழத் தேவையான குறைந்த பட்ச வருமானம் ஈட்டமுடியா நிலை

தமிழ் விளக்கம்

ஒரு நாட்டின் அல்லது ஓரிடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை என்பது, உணவு, சுத்தமான நீர், உடை, வீடு, கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள்போன்றவை போதுமான அளவு இல்லாதிருப்பதையும், பிற சமூகங்களுடன் தொடர்புகளற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையையும் குறிக்கின்றது. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் காரணமாக, வறுமை எல்லாச் சமூகங்களிலும் விரும்பத்தகாத ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஏழ்மை நிலையை absolute அல்லது தீவிர ஏழ்மை நிலை என்றும் relative ஒப்பிடத்தக்க ஏழ்மை நிலை என்றும் அதன் நிலையை வேறுபடுத்தி காட்டுவர். ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருக்கும் நிலையை absolute poverty என்றும், பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரத்தை ஒப்பிடும்போது குறைவான வாழ்க்கைத்தரம் கொண்டிருத்தலை, இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிக்கும் ஒப்பிடத்தக்க ஏழ்மை நிலை (relative poverty) என்பர். வாழ்க்கையின் சில காலகட்டங்களிலோ அல்லது சில சூழ்நிலைகளிலோ எதிர்கொள்ளும் குறுகிய கால ஏழ்மை (transitional poverty) தற்காலிக வறுமை (எ.காஆதரவற்ற குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள்) என்றும், குறைந்த கல்வி மற்றும் குறைந்த திறனால் பாதுகாப்பற்ற, வேலையில்லாத நிலையால் ஏழ்மை நிலையைக் கடந்தும் மீண்டும் ஏழ்மைக்கு தள்ளப்படும் ஊசலாட்ட நிலையை விளிம்பு நிலை ஏழ்மை (marginal poverty) என்றும், நீண்ட காலம் அல்லது தலைமுறை தலைமுறையாக ஏழ்மை நிலையிலிருப்பவர்களின் ஏழ்மையை எஞ்சியிருக்கும் அல்லது தொடர் வறுமை (residual poverty) என்றும் வகைப்படுத்தப்படுவர்.

English

The possession of scant income and assets such that one cannot maintain a subsistence level of income. This is compared to relative poverty, in which one's standard of living is well beneath those of the mainstream community but still higher than the subsistence level.