abstract

சுருக்கம், சாரம், சுருக்கக் குறிப்பேடு, ஆய்வு / அறிக்கைகளின் சுருக்கம், அருவமான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, கருத்தியலான

தமிழ் விளக்கம்

அறிவார்ந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றி எழுதப்படும் சுருக்கம். 200 வார்த்தைகளுக்கு மிகாமல், கட்டுரை தெரிவிக்க வரும் செய்தி என்ன, முக்கியக் கருத்துரு என்ன, என்னென்ன வழிமுறைகள் கையாளப்பட்டது, கட்டுரையின் முடிவுகள் என்ன என்று இது சுருக்கமாகத் தெரிவிப்பது. இந்தச் சுருக்கத்தை வைத்தே கட்டுரையை வகைப்படுத்தி அட்டவனைப்படுத்தும் நூலக சேவைகள் வழங்கப்படுகின்றன. சமூகப் பணிக் கட்டுரைகளின் சுருக்கம் என்பது பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளைப் பற்றிய தரவுகள் (data base) அடங்கிய தொகுப்பு ஆகும் .

English

A summary of a scholarly article. It usually appears immediately before the text in published articles and is often included in indexing and abstracting services (such as Social Work Abstracts and Psychological Abstracts) and in on-line databases (such as DIALOG and PsycINFO). Abstracts usually consist of a single paragraph of fewer than 200 words that outlines what the article is about, its key concepts, the method used to study the problem, and the conclusion reached.