Academy of Certified Social Workers (ACSW)
சான்றளிக்கப்பட்ட சமூகப் பணியாளர்களுக்கான அகாடமி
தமிழ் விளக்கம்
சமூகப்பணியில் முதுகலை அல்லது ஆய்வுப் பட்டம் பெற்றவர்களின் பயிற்சித் திறனை மதிப்பீடு செய்து சான்றளிக்க தேசிய சமூகப்பணியாளர் சங்கத்தால் 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. சமூகப்பணியில் உயர்கல்வித் தகுதியோடு, மேற்பார்வையாளரின் கண்காணிப்பில் இரண்டாண்டுகள் பணி அனுபவம் அல்லது 3000 மணி நேரம் பகுதிநேர பணியனுபவம், சமூகப்பணி சகாக்கள் மூவரின் பரிந்துரை, அவர்களுக்கு என்று நடக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது போன்றவற்றை அடிப்படையாக வைத்து, சான்றளிக்கப்பட்ட சமூகப் பணியாளர்களுக்கான அகாடமியில் ஒரு சமூகப்பணியாளர் உறுப்பினராக முடியும். .
English
A program established by the National Association of Social Workers (NASW) in 1962 to evaluate and certify the practice competence of individual social workers with advanced degrees. Social workers are eligible for ACSW membership if they have obtained an MSW or DSW or PhD (see doctoral programs) from an accredited school, have two years of supervised full-time or 3,000 hours of part-time practice experience, provide three professional references, and successfully pass the ACSW examination.