ACBSW
இளங்கலை சமூகபணியாளர்களுக்கு சான்றளிக்கும் அகாடமி
தமிழ் விளக்கம்
இளங்கலை சமூகப்பணி கல்வி பயிலும் மாணவர்களின் பயிற்சித் திறனை மதிப்பீடு செய்யவும், அதனடிப்படையில் சான்றளிக்கவும், தேசிய சமூகப் பணியாளர் சங்கத்தால், 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலை சமூகப்பணி பயின்று, இரண்டாண்டுகள் முழுநேர சமூகப்பணியாளராகவோ, 3000 மணிநேரம் பகுதிநேர சமூகப்பணியாளராகவோ பணியாற்றி, தேசிய சமூகப்பணியாளர் சங்கத்தின் நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு, எழுத்துபூர்வமான தேர்வு, மேற்பார்வையாளர் மதிப்பீடு தேர்வு பெற்று, சமூகப்பணி சகாக்களால் பரிந்துரை செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் இளங்கலை சமூகபணியாளர்களுக்கு சான்றளிக்கும் அகாடமியில் உறுப்பினராக முடியும். .
English
Academy of Certified Baccalaureate Social Workers (ACBSW). A program established by the National Association of Social Workers (NASW) in 1991 to evaluate and certify the practice competence of baccalaureate social workers. Baccalaureate social workers are eligible for ACBSW if they obtain BSW degrees from accredited schools of social work, complete two years of full-time or 3,000 hours of part-time postgraduate social work employment, agree to adhere to the NASW Code of Ethics, and complete a certification process that includes a written examination, supervisory evaluations, and professional references. NASW membership is not required for ACBSW certification.