accessibility of service

எளிதில் அணுகத்தக்க சேவைகள், சேவைகளை அணுக இயலுந்தன்மை

தமிழ் விளக்கம்

ஒரு சமூக சேவை நிறுவனம் அதனுடைய சேவைகளை எளிதில் பெறத்தக்க அளவு வாடிக்கையாளர்களுக்கு அருகாமையிலும், வாடிக்கையாளர்களுக்கு வசதியான நேரங்களில் செயல்படுவதாயும், வாடிக்கையாளர்களால் செலுத்துமளவு சேவைக்கட்டணம் வசூலிப்பதாயும், போதுமான கட்டமைப்பு மற்றும் பணியாளர்களைக் கொண்டுள்ளதாயும் இருக்கவேண்டும். மேலும் ஊனமுற்றோர் வந்துசெல்லும் அளவு சாய்வுப் பாதைகளும் இருக்கவேண்டும். மொத்தத்தில் வாடிக்கையாளர்கள், தாங்கள் அந்த நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றோம் என்ற உணர்வு வரும்படி இருக்கவேண்டும்.

English

The relative opportunity for people in need to obtain relevant services. For example, a social agency with greater accessibility is located near its natural clientele; is open at convenient hours; maintains shorter waiting lists; has affordable fees; and has personnel, resources, settings, and policies that make clients feel welcome. Also, appropriate ramps and doors to permit entrance by people with disabilities are essential to an agency's accessibility.