accreditation

ஒப்புதல் அளித்தல், சாட்டியுரைத்தல், அங்கீகரித்தல்

தமிழ் விளக்கம்

நிறுவனங்கள் (உ.ம். கல்வி நிலையங்கள், சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள், செவிலியர் பயிற்சி மையங்கள்) வெளிப்படையான, குறிப்பிட்ட தரத்தின் படி செயல்படுகின்றது எனபதைச் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் இயங்கும் சமூகப்பணி கல்லூரிகள், சமூகப்பணிக் கல்விக்கான குழுவால் (Council on Social Work Education (CSWE) அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டு, அக்குழு நிர்ணயித்துள்ள தரத்திற்கொப்ப நடைபெறுகின்றது என்று ஒப்புதல் அளிக்கும். இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்க NAAC (National Assessment and Accreditation Council), பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரமளிக்க NBA (National Board of Accreditation), செவிலியர் பயிற்சிக்கு அங்கீகாரமாளிக்க INC (Indian Nursing council) போன்ற அமைப்புகள் அதிகாரம் பெற்றவை. இந்தியாவில் சமூகப்பணிக்கல்விக்கு என்று தனித்துவம் பெற்ற அங்கீகார அமைப்புகள் ஏதுமில்லை.

English

The acknowledgment and verification that an organization (such as an educational institution, social agency, hospital, or skilled-nursing facility) fulfills explicit specified standards. For example, schools of social work in the United States are evaluated periodically by the Council on Social Work Education (CSWE) and accredited if they meet CSWE standards.