acid rain

அமில மழை

தமிழ் விளக்கம்

'அமில மழை' என்பது, ஈரலிப்பான (மழை, பனிமழை, பனி போன்றவை) அல்லது உலர்ந்த (அமிலத்தன்மை கொண்ட துகள்களும், வளிமங்களும்) அமிலத் தன்மை கொண்ட பொருட்களின் படிவைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். இதனால் இதனை 'அமில மழை' என்பதிலும் 'அமிலப் படிவு' என்பது கூடுதல் பொருத்தம். அமிலத் தன்மையை அளவிட பிஎச் (pH) என்னும் கார-காடித்தன்மை சுட்டெண் பயன்படுகின்றது. காய்ச்சிவடித்த நீர் சமநிலையானது. இதன் pH 7 ஆகும். pH 7 க்கும் குறைவாக இருக்கும் நீர்மங்கள் அமிலத் தன்மை கொண்டன, 7 க்கும் கூடுதலான pH அளவு கொண்டவை காரத் தன்மை உள்ளவை. மாசுகள் அற்ற தூய மழைநீர் பொதுவாகச் சிறிது அமிலத் தன்மையானது. இதன் pH சுமார் 5.2, ஏனெனில் வளியில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வளியில் உள்ள நீருடன் தாக்கமுற்றுக் காபோனிக் அமிலத்தை உண்டாக்குகிறது. இது ஒரு மென்னமிலம் (காய்ச்சிவடித்த நீரில் இதன் pH 5.6) ஆகும்.
மழையில் இருக்கக்கூடிய மேலதிகமான அமிலத்தன்மை, முதன்மையான மாசுக்கள் தாக்கமுறுவதால் உண்டாகிறது. இம்மாசுக்களான சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் என்பன வளியிலுள்ள நீருடன் தாக்கமுற்று சல்பூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் போன்ற வன்னமிலங்களை உருவாக்குகின்றன.

English

Precipitation in which the water is fouled by noxious chemicals, primarily sulfur dioxide and nitrogen oxides, mostly from automobiles and factories that burn fossil fuels. This rain pollutes lakes and rivers and damages buildings, crops, and forests, often far from the source of the chemicals. Efforts to minimize the problem emphasize cleaner and more-efficient fuel burning and chemically neutralizing the acid after it has entered the lakes and soil.