ACLU
அமெரிக்க மனித உரிமைகள் ஒன்றியம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசியல் சாசனம் அம்மக்களுக்கு வழங்கிய மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அதற்கு எதிரான விதிமீறல்களை தடுக்கவும், ரோகர் பால்ட்வின், கிறிஸ்டல் ஈஸ்ட்மன், ஹெலன் கெல்லர் மற்றும் வால்டர் நெல்ஸ் ஆகியோரால் 1920 ஆண்டு உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும். மனித உரிமைகளுக்கு ஆதரவாக வழக்காடுதல், அரசியலணைவு (சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வேண்டுதல்), மனித உரிமைக்கல்வி போன்ற செயல்பாடுகளே இந்நிறுவனப் பணிமுறைகள்.
English
American Civil Liberties Union (ACLU). A civil rights group formed in 1920 and dedicated to the restraint of governmental interference with individuals' personal freedom. See also civil rights.