acquired immune deficiency syndrome (AIDS)
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி, பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome)
தமிழ் விளக்கம்
எய்ட்ஸ் எனும் நோய் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட தீநுண்மத்தால் (வைரசால் HIV ) ஏற்படுகிற ஒரு நோயாகும். இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலைப் படிப்படியாகக் குறைத்து, பிற தொற்றுநோய்கள் இலகுவாக தொற்றிக்கொள்ள வழிவகுக்கின்றது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து மற்றொருவருக்குத் தொற்றுகின்றது..
எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது. எயிட்சு நோயுள்ளவர்களை , காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்புப் புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாகத் தாக்குகிறது. எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரப்பிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை கூடுதலாகக் காணப்படும். அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்த் தொற்றுகளுக்கும் ஆளாகின்றனர்.

English
A disease thought to always be fatal, caused by infection with human immunodeficiency virus (HIV). Many researchers now refer to this disease as HIV disease rather than AIDS. Following infection, symptoms include fever, night sweats, and swollen lymph nodes. This brief acute phase precedes the development of antibody responses (seroconversion), which usually takes place six to 12 weeks after infection. In the interval between infection and antibody response (“window period”), the individual is infectious, but the infection is not detected on antibody tests. Following the acute phase, there are four stages of the HIV disease continuum. Stage 1 lasts from a few months to many years, during which the infected person is mostly asymptomatic but infectious. Stage 2 symptoms include a range of mild infections, weight loss, and fatigue. Stage 3, formerly called “AIDS-related complex” (ARC), symptoms may include episodic occurrences of pulmonary tuberculosis, pneumonia, Kaposi's sarcoma, persistent fever, excessive weight loss, and other symptoms. In stage 4 the diagnosis of AIDS is made. The immune system is so severely suppressed that the body cannot defend against infection. Some drugs may play a role in slowing infection or in bolstering the immune system, but there is no cure for AIDS, and the body ultimately loses the capacity to defend itself against one or more fatal infections or conditions. People with AIDS often face discrimination and need health and social services ranging from pretest and posttest counseling, through assistance in applying for insurance or social security benefits, to hospice care.