action research

செயல் நோக்குடைய ஆய்வு

தமிழ் விளக்கம்

சில சமூக நிகழ்வுகளை (சூழ்நிலைகளை) எதிர்கொள்பவர்கள், அதை மாற்றவோ மேம்படுத்தவோ முயற்சி செய்யும் போது, அந்த முயற்சியில் கையாளப்பட வேண்டிய காரண காரியத் தொடர்புகளையும், அதன் நியாயத்தையும் புரிந்து கொள்ளவும், அதன் மூலம் செய்யவிருக்கும் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி, சமூக நிகழ்வுகளில் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்த எடுத்துக் கொள்ளும் சுய பரிசோதனையை செயல் நோக்குடைய ஆய்வு எனலாம். சமூகத் திட்டமிடலிலும், சமுதாய அமைப்பு முறையிலும், ஒரு திட்டத்தை வடிவமைக்கத் தரவுகள் சேகரிக்கும் முறையிலே, அந்த திட்டத்தின் மூலம் தீர்க்க விரும்பிய பிரச்சனைகளின் தீவிரத் தன்மையை மட்டுப்படுத்துமாறு செய்யும் முயற்சியே செயல் நோக்குடைய ஆய்வு என்றும் சொல்லலாம். இதைச் சமூகத் திட்டமிடலிலும் (social planning), சமுதாய அமைப்பிலும் (community organization) பின்பற்றுகிறார்கள்.

English

In social planning and community organization, the linking of the data-gathering process with the development of a program designed to alleviate the problem that has been identified. Mobilization for Youth is one example.