action system

செயல்பாட்டுத் தளம், நடவடிக்கைத் தளம்

தமிழ் விளக்கம்

அடைய வேண்டிய இலக்குகளுக்காக / மாற்றங்களுக்காக எந்த மனிதரிடம், மனிதர்களிடம், அவர் சார்ந்துள்ள ஆதாரச்சூழலில் சமூகப்பணியாளர் பணியாற்றுகின்றாரோ அதுவே செயல்பாட்டுத்தளம் என்றழைக்கப்படுகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டவர் சார்பாக சமூகப்பணியாளர் தலையிடும் போது, வெளியேற்றப்பட்ட அக்குடும்பம், அக்குடியிருப்பில் வாழும் மற்றவர்கள், அக்குடியிருப்பின் உரிமையாளர், வீட்டு வசதித் துறையினர், காவல் துறை, வழக்கறிஞர், அச்செய்தியை சமூகத்தின் பார்வைக்கு கொண்டுசெல்லும் ஊடகங்கள் என்ற இவை அனைத்தும் அடங்கியதே செயல்பாட்டுத்தளம்.

English

The people and resources in the community with whom the social worker deals to achieve desired changes. For example, the action system for a client who is being evicted might include the other residents of the apartment building, local housing officials, and the media contacted by a social worker in an effort to change a landlord's policies.