action theory

செயல் கோட்பாடு

தமிழ் விளக்கம்

மனித செயல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், செயலரின் சமூகப் பின்னணியையும், ஆளுமையையும் புரிந்து கொள்ள சமூக அறிவியலாளர்கள் பயன்படுத்தும் பல கோட்பாடுகளின் தொகுப்பு. ஒரு செயலையும், அச்செயலைச் செய்பவரையும், அச்செயலின் மூலம் வெளிப்படும் நடத்தையையும் ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம், அச்செயலரின் நோக்கங்களையும் மதிப்பீடுகளையும் அறியமுடியும் என்று சொல்லும் கோட்பாடுகள். இது நடத்தையென்பது, வரையறுக்கப்ப்ட்ட கலாச்சாரச் சூழலில், உள்வாங்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், பரஸ்பர எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிகழும், அகநிலை உணர்வுகளின் வெளிப்பாடு என்று கணிக்கும் நடத்தைக் கோட்பாடுகளிலிருந்து மாறுபட்டது.

English

The group of concepts used by social scientists to understand social and personality systems by analyzing “acts” and the individuals who perform them, that is, the “actors.” In assessing an act, the investigator considers the actor’s values and goals in carrying out the act, as well as overt behaviors. Action theory differs from classical behaviorism in that it emphasizes the value-motivated behavior of individuals and the subjective meanings attached to an action. Behavior is seen as occurring within culturally defined situations and relationships and includes the actor’s internalized values and expectations of the reactions of others.