action therapy

செயல் சிகிச்சை, செயல்படுதலின் மூலம் தீர்வுகாணல்

தமிழ் விளக்கம்

உணவே மருந்து என்பது போல செயலே மருந்து. ஒரு மனிதனின் நடத்தையை மாற்றுவதும், மாற்றத்திற்குத் தடையாக உள்ளவற்றை மாற்ற முயற்சிக்கும் சிகிச்சை முறைகள். இது நடத்தை மாற்றுச்சிகிச்சை (behavior modification), அறிதிறன் மாற்றுச் சிகிச்சை (cognitive therapy methods), அனுபவ சிகிச்சை (experiential therapy) போன்ற சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது. தகவல் பரிமாற்றத்தின் மூலம், உரையாடலின் மூலம் ஒருவருக்குப் பிரச்சனைகளைப் புரிய வைத்து, உள்ளொளி உருவாக்கி அதன் மூலம் மறைமுகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் முறைகளிலிருந்து மாறுபட்டது.

English

Treatment procedures and intervention strategies based on direct alterations of behaviors or of obstacles to change. Such therapies include behavior modification, some cognitive therapy methods, and experiential therapy. The term “action therapy” is often used to make a distinction from so-called informational therapy, which is oriented toward helping clients gain insight and other forms of self-awareness that foster changes indirectly.