activism

சீர்படுத்துதல், ஒன்றைச் சரிசெய்ய விறுவிறுப்பாகச் செயலாற்றுதல்

தமிழ் விளக்கம்

சமூகப் பிரக்ஞையை வளர்ப்பதும், ஒன்றிணைந்து செயல்படுவதும், வாக்காளர்களைத் (ஆதரவாளர்களைத்) திரட்டுவதும், மக்களுக்கான இயக்கம் கட்டுவதும், பிரச்சார உத்திகளின் மூலம் நோக்கங்களைப் பலரறி நிலைக்குக் கொண்டுசெல்லலும், வேறு பொருத்தமான முறைகளைக் கையாண்டும் சமூகம் மற்றும் அரசியல் தளத்தில் மாற்றங்களுக்காக முனையும் தன்மை. பாரபட்சமற்ற நோக்கு, நடுநிலை, சாத்துவிகம் போன்ற நிலையெடுக்காமல், தன்னைச் சார்ந்திருக்கின்ற மக்களுக்காக சார்பு நிலை எடுத்து, இதை இப்படித்தான் செய்யவேண்டுமென்று திவீரத்துடன் சமூக நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்துவது அல்லது தனது வாடிக்கையாளர்களின் தவறான மதிப்பீடுகளை மாற்ற அதே திவீரத்துடன் செயல்புரிவது இதன் தன்மையாகும்.

English

Planned behavior designed to achieve social or political objectives through such activities as consciousness-raising, developing a coalition, leading voter registration drives and political campaigns, producing propaganda and publicity, and taking other actions to influence social change. See also political activism.