activity group

செயல்பாட்டுக் குழு

தமிழ் விளக்கம்

தங்களுக்குப் பரஸ்பர ஆர்வமுள்ள செயல்களில், சிகிச்சை முறை சார்ந்தும், சிகிச்சை முறை சாராமலும் ஈடுபடும் குழு. ஆரம்பகால சமூகக் குழுப்பணியில், சமுதாய ஊழியரகங்களில் (settlement houses), இளைஞர் சேவை நிறுவனங்களில் சமூகம் மற்றும் (கை) தொழில் திறன் வளர்க்கவும், ஜனநாயகப் பண்புகளை வளர்த்தெடுக்கவும், மனிதர்களுக்கிடையேயான உறவுமுறைகளைச் செம்மைப்படுத்தவும் இது மாதிரியான குழுக்கள் உருவாக்கப்பட்டன. இக்குழு உறுப்பினர்கள் சமைத்தல், பாடுதல், தச்சு வேலை, கைத்தொழில் போன்ற எளிமையான செயல்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்த மாதிரியான குழுக்கள் சமீப காலங்களில், நலம் பேணகங்களிலும் (nursing homes), மனநோய் மருத்துவமனைகளிலும், பொழுதுபோக்கு மையங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றன.

English

A form of group involvement, which may or may not have a specifically designed therapeutic purpose, in which the participants work on programs of mutual interest. The members engage in activities as diverse as cooking, folksinging, carpentry, or crafts. Historically, activity groups were prevalent in early social group work, especially in settlement houses and youth services organizations. Their primary orientation was not therapeutic per se but was a means for learning social skills, engaging in democratic decision making, and developing effective relationship capacities. More recently, activity groups are found in nursing homes, mental hospitals, and recreation centers.