acute stress disorder

கடுமையான மன அழுத்த நோய்

தமிழ் விளக்கம்

ஏதாவதொரு நிகழ்வின் மூலம் பேரிழப்பை எதிர்கொள்ளும் ஒருவருக்கு, அந்த நிகழ்வு ஏற்படுத்தும் நினைவுகளால் ஒருமாததிற்குள் உருவாகும் மனப்பதட்டம். இந்த மனப்பதட்டத்தால், தூக்கமின்மை, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, அமைதியற்ற தன்மை, எதற்கும் திடுக்கிடுவது போன்ற அறிகுறிகளும், எதிலும் தொடர்பறுந்து போவதால் ஏற்படும் உணர்வு மழுங்கல், திகைப்படைதல், தன்னிலை இழத்தல், எதார்த்ததை உணரத் தவறுதல், அந்த நிகழ்வின் சில கூறுகளை நினைவுகொள்ள இயலாமை போன்ற அறிகுறிகளும் தென்படும். இந்த அறிகுறிகள் நீடிக்கும் பட்சத்தில், அது பெருந்துன்பத்திற்குப் பின்னான மன அழுத்த நோயென்று கூறப்படும்.

English

An anxiety disorder that occurs within a month of encountering a distressing situation and results in recurrent thoughts, dreams, flashbacks, and upset when reminded of the stressor. The person develops anxiety symptoms (such as sleeplessness, poor concentration, restlessness, exaggerated startle response) and dissociative symptoms (such as numbing and emotional detachment, feeling dazed, depersonalization, derealization, and inability to remember aspects of the trauma). If the symptoms persist, the diagnosis becomes posttraumatic stress disorder (PTSD).