ACYF
குழந்தைகள், இளைஞர், மற்றும் குடும்பங்களை நிர்வகித்தல்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்படும் நிர்வாகம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பகல் நேரப் பராமரிப்பு, குழந்தைகள் தத்தெடுப்பு, குழந்தைகளை வளர்ப்பில்லங்களில் வைத்துப் பேணுதல், பிரத்யேகத் சேவைகள் தேவைப்படுவோர் மீதான அக்கறை போன்ற குடும்ப நலத் திட்டங்களை நிர்வாகிக்கும் பொறுப்புடையது. இதை நிர்வாகிக்கும் ஆணையர் அமெரிக்க ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படுவதால் அரசியல் முக்கியத்துவம் பெற்ற பதவி.
English
Administration on Children, Youth, and Families (ACYF). The federal organization within the Office of Human Development Services (OHDS) of the U.S. Department of Health and Human Services (HHS) that facilitates programs that provide social services to families, including day care, adoption, and foster care for children, particularly young special-needs clients.