adaptation

தகவமைவு, ஒத்துப் போகும் குணம்

தமிழ் விளக்கம்

தகவமைப்பு என்பது மனிதர்களும், பிற உயிரினங்களும் தாங்கள் வாழவும், தங்களை வளர்த்துக்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் தாங்கள் வாழும் சுற்றுப்புறத்தோடு இணைந்து செல்லும் தன்மை. இது பரஸ்பரமாக, உயிரனங்கள் சுற்றுப்புறத்தின் மீதும், சுற்றுச் சூழல் உயிரனங்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம். அமைப்பு முறைக் கோட்பாட்டை தங்கள் அணுகுமுறையாகக் கொண்டு பணியாற்றும் சமூகப்பணியாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களை நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால், அந்த நெருக்கடிகளைச் சமாளிக்கும் உளத்திறனை வளர்த்தோ, அல்லது நெருக்கடியோடு தகவமைத்துக் கொள்ளவோ உதவி செய்கிறார்கள்.

English

The active efforts of individuals and species over their life spans to survive, develop, and reproduce by achieving goodness of fit with their environments. Adaptation is also a reciprocal process between the individual and the environment, often involving changing the environment or being changed by it. Social workers oriented to systems theories consider that helping people move through stressful life transitions by strengthening or supporting their adaptive capacities is a central part of their intervention strategies. See also environmental treatment, direct treatment, and indirect treatment.