addiction

பழக்க அடிமைத்தனம், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்

தமிழ் விளக்கம்

உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதகமான விளைவுகள் ஏற்படுமென்று தெரிந்திருந்தும் அந்த நடத்தையை மீண்டும், மீண்டும் மேற்கொள்வதையே பழக்கத்திற்கு அடிமையாதல் என்கிறோம். போதை மற்றும் மதுவுக்கு அடிமையாவதைத் தவிர, உடற்பயிற்சி, உணவு, கணனி (முகநூல்) உபயோகம், சூதாட்டம் போன்றவற்றிற்கு அடிமையாவதையும் இதில் சேர்க்கலாம். இரசாயனப் பொருளின் (மது போதை) மீது ஏற்படும் சார்புத்தன்மை, அதை ஒரு சுபாவமான பழக்கமாகி, அப்பொருளுக்கான தாங்கு சக்தியை உடலில் அதிகரித்து, அதிக அளவு எடுத்துக்கொண்டால்தான் போதையேறும் என்ற நிலைக்குக் கொண்டுசெல்லும். மாறாக அதன் அளவைக் குறைத்தாலோ, அதிலிருந்து விடுபட நினைத்தாலோ பதட்டம், எரிச்சல், அப்பொருளின் மீது அதிவேட்கை, குமட்டல், தலைவலி, வியர்த்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். Addiction (பழக்க அடிமைத்தனம்) என்ற வார்த்தைக்கு பதிலாக மட்டுமீறிய போதைப்பொருள் சார்பு (Substance Abuse) என்ற வார்த்தையை உளவியலாளர்கள் /மனநலப் பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

English

Physiological and psychological dependence on a chemical that results in increased tolerance and in withdrawal symptoms when the substance is unavailable. Addictive substances include alcohol, tobacco, narcotics, and many sedatives. Most professionals now use the term substance dependence.