adhocracy
படிநிலைகள் அதிகமற்ற குறைந்த அதிகாரத்துவமுடைய நிர்வாக அமைப்பு
தமிழ் விளக்கம்
அதிகாரத்துவ ஆட்சி (Bureaucracy) முறைக்கு மாறுதலானது Adhocracy. இது நெகிழ்வான, மாறுதலை ஏற்றுக்கொள்கிற, அமைப்புசார, முறையான கட்டமைப்பு இல்லாத நிர்வாகமுறை. இந்த வார்த்தை ஆல்வின் டோப்ளர் என்பவரால் 1970 இல் ஒரு நிர்வாகக் கோட்பாடாக, இணைய நிறுவனங்களின் நிர்வாக அமைப்பை முன்மாதிரியாக வைத்துச் சொல்லப்பட்டது. இந்த நிர்வாக முறை பாரம்பரிய நிர்வாக அமைப்பு முறைகளை விட செயல்திறன் மிக்கதெனவும், புதிய கருத்துகளை உள்வாங்கும் தன்மையுடையதெனவும் கருதப்படுகிறது.
English
A type of administrative organization characterized by minimization of personnel hierarchies, theoretically designed to achieve greater program flexibility; in social agencies, an alternative to bureaucracy.