adjudication
சட்டமுறைமைக்கு உட்பட்டு முடிவெடுத்தல்
தமிழ் விளக்கம்
சட்டவிதிகளுக்கு உட்பட்டு முடிவெடுத்தல் என்பது, வழக்குத் தொடுத்தவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களையும், அவர்களுடைய வாதங்களையும் கேட்டறிந்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு, வழக்காடியவர்களின் உரிமைகளையும், கடமைகளையும் பற்றி நீதிபதி வழங்கும் தீர்ப்பு. Adjudication என்பது தொழில்முறை சார்ந்த நிறுவனங்களில் பிரச்சனைகள் வரும்போது, ஒரு செயல் அத்தொழிலுக்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி எடுக்கப்பட்டதா அல்லது அதில் சுயநலநோக்கு இருந்ததா, அந்தச் செயலின் விளைவு என்ன என்பதை விசாரித்து வழங்கப்படும் செயல்முறை தீர்ப்பு.
English
1. In law, a court decision and the process of reaching that decision through a trial or legal hearing. 2. In a professional organization, the process of determining whether a professional action is in violation of the code of ethics or personnel standards.