adjustment

விட்டுக்கொடுத்தல், சரி செய்தல்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதன் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவோ, அதற்குத் தடையாயிருக்கும் காரணிகளைக் கலைந்து, தன்னைச் சுற்றியிருப்பவர்களோடு இணக்கமாக வாழ செய்யும் முயற்சிகளைச் சரிசெய்தல் அல்லது விட்டுக் கொடுத்தல் எனலாம். இந்த முயற்சி பழக்கமாகி விடும்போது அவர்களிடம் ஒத்துப் போகும் குணம், தகவமைவுத் திறன் உருவாகிறது. ஒத்துப் போகமுடியாதபோது பொருத்தக் கேடும், அதன் விளைவாக சூழல் ஏற்கா உளப்பிணியும் உருவாகிறது.

English

The activities exerted by an individual to satisfy a need or overcome an obstacle to return to a harmonious fit with the environment. These activities may become habitual responses. Successful adjustment results in adaptation; unsuccessful adaptation is called maladjustment.