ADL
அன்றாட வாழ்க்கைப் பாடு, தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள், தினப்படி வேலைகள்
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தையும், பிறரைச் சார்ந்திராமல் பராமரிக்கச் செய்யும் அன்றாடப் பணிகள். இதில் சமைத்தல், வீட்டுவேலைகள், குளித்தல், துவைத்தல், பொருள் வாங்குதல், பணம் கையாளுதல் போன்ற செயல்கள் அடங்கும். இந்தத் தினப்படி வேலைகளை அறிந்துகொள்வது வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சமூகப்பணியாளர்கள் புரிந்துகொண்டு செயல்பட உதவும்.
English
activities of daily living (ADL). The performance of basic self- and family-care responsibilities necessary for independent living. Such activities include meal preparation, bathing, dressing, shopping, cleaning, handling financial matters, light home maintenance, and household chores. The degree of ADL performance is considered by social workers in determining the type of needs clients have.