Adlerian theory

அட்லரின் கோட்பாடு

தமிழ் விளக்கம்

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உளநோய் மருத்துவர் அட்லரின் கோட்பாடு. அட்லர் என்ற உளநோய் மருத்துவரின் சிகிச்சை முறை. ஆஸ்திரியா நாட்டு உளப்பிணி மருத்துவரான ஆல்பிரட் அட்லர் (1870–1937) மனித ஆளுமை மற்றும் அதன் தன்மைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கிய உளப்பிணி சிகிச்சைமுறை. மனிதர்களிடத்தில் எதிலும் முழுநிறைவடைய (Superiority and Perfection) வேண்டுமென்ற உள்ளார்ந்த துடிப்பு (இயக்கு சக்தி) இருப்பதாகவும், அந்தத் துடிப்பே மனித வாழ்க்கையையும், அவர்களுடைய சமூக ஆர்வங்களையும் வழிநடத்துகிறது எனவும், இதுவே சுயநலமற்ற பொதுநன்மைகளை உருவாக்கும் காரணியாக அமைகின்றது என்றும் விளக்கிய கோட்பாடு. மனிதர்கள் சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர் என்று கூறிய கோட்பாடு.

English

The concepts about human personality characteristics and psychosocial therapy developed by Austrian psychiatrist Alfred Adler (1870–1937). He hypothesized that humans have an inherent drive for power and strive from feeling inferior toward superiority and perfection. The individual does this through one's lifestyle. People achieve goals by developing their social interests, and healthy people ultimately learn to place the good of society over immediate personal gain.