Administration for Native Americans
பூர்வீக அமெரிக்கர்களின் (அமெரிக்க இந்தியர்கள்) நலத்திற்கான நிர்வாகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான துறையின் மனித மேம்பாடு அலுவலகமே, பூர்வீக அமெரிக்கர்களின் நலத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்பு. அமெரிக்க இந்தியர்களும், அலாஸ்காவின் பூர்வீகக் குடிகளும், மற்ற அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற உதவுவதோடு, அவர்களின் பிரத்யேகத் தேவைகளையும் கவனத்தில் கொண்டு இந்த அலுவலகம் செயல்படுகின்றது. அமெரிக்க அரசின் உள்துறை அமைச்சகத்தின் இந்திய விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிகளுக்குத் துணை புரிவதும் இந்த அலுவலகத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
English
The organization within the Office of Human Development Services (OHDS) of the U.S. Department of Health and Human Services (HHS) whose responsibilities are to ensure that American Indians and Alaska Natives have the same access to the nation’s health care and welfare provisions as do all other Americans and that their unique needs are addressed. The functions of the administration complement those of the Bureau of Indian Affairs (BIA) within the U.S. Department of the Interior.