administration in social work

சமூகப்பணியில் நிர்வாகம், சமூக சேவை நிறுவனங்களை நிர்வகித்தல்

தமிழ் விளக்கம்

சமூகப் பணியில் நிர்வாகம் என்பது பொதுவான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றியே செய்யப்பட்டாலும், சமூகப்பணி கையாளும் பிரச்சனைகளும், அதற்காக வகுக்கப்பட்ட நெறிமுறைகளும் அதைப் பிற நிர்வாக முறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவன. சமூகப்பணியில் நிர்வாகம் என்பது சமூக நலத்திற்கான குறிக்கோள்களை (Social Policy) சமூக சேவைகளாக மாற்றும் முயற்சிதான். இதற்காக ஒரு சமூக சேவை நிறுவனத்திற்காக குறிக்கோள்களை வடிவமைப்பது, அதை அடையத் தேவையான நிதி, மனிதவளம், கட்டமைப்பு ஆதாரங்களை ஒருங்கிணைப்பது, நிறுவனச் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது போன்ற கடமைகள் சமூகப்பணி நிர்வாகத்திற்கு உண்டு. சமூகப்பணி நிர்வாகம் சமூகப்பணி மதிப்பீடுகளையும், நெறிமுறைகளையும் சமூகப்பணியாளர்கள் பின்பற்ற ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்து, மக்களின் பிரச்சனைகளை உடனடியாக எதிர்கொள்ள வழிவகுக்கும் முறையாகும்.

English

Methods used by those who have administrative responsibility to determine organizational goals for a social agency or other unit; acquire resources and allocate them to carry out a program; coordinate activities toward achieving selected goals; and monitor, assess, and make necessary changes in processes and structure to improve effectiveness and efficiency. In social work, the term is often used synonomously with management. For social work administrators, implementation of administrative methods is informed by professional values and ethics with the expectation that these methods will enable social workers to provide effective and humane services to clients. The term also applies to the activities performed in a social agency that contribute to transforming social policy into social services. See also management tasks.