admissions procedures

சேர்க்கை நடைமுறைகள்

தமிழ் விளக்கம்

முறையாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், நிறுவன நடைமுறைகளின் படியும் உதவி தேவைப்படுவோரைத் தேர்வு செய்ய உதவும் வழிமுறை. கேட்கப்படும் உதவியின் தன்மை பொறுத்தும், உதவிசெய்யும் நிறுவன விதிமுறைகளைப் பொறுத்தும் இந்த வழிமுறைகள் எளிதாகவோ, பலநிலைகளைக் கொண்டதாகவோ இருக்கலாம். வாடிக்கையாளரின் பின்னணியை அறிந்துகொள்ள வாடிக்கையாளரையும், அவர் குடும்பத்தினரையும் பேட்டி காணல், தேவைப்படின் வாடிக்கையாளரை மருத்துவம் மற்றும் உளப்பரிசோதனைக்கு உட்படுத்துதல், நுழைவு அல்லது சேவைக்கட்டணம் ஏதுமிருந்தால் வாடிக்கையாளரால் செலுத்தமுடியுமா என்பதையறிதல், சில பிரச்சனைகளுக்குப் பொருளுதவி அளிக்கும் சேவை நிறுவனங்களிடம் ஒப்புதல் வாங்குதல் என்று சேர்க்கை நடைமுறைகள் பலநிலைகளைக் கொண்டதாக அமையலாம்.

English

The explicit rules and modes of action for bringing an individual under the care of an organization, social agency, or health care facility. Such procedures often include getting consent from the client (or those responsible for the client) to provide the appropriate care; obtaining pertinent background information about the client from a variety of sources (that is, interviews with the client or client's family, medical records, social histories, and medical and psychological tests); contracting with the client or third parties to provide financing for the care; advising the client about when to go to the appropriate place; and coordinating the initial information exchanges between the client and those concerned about the client. Admissions procedures often include criteria for screening applicants for the service.