adoption
புத்திரசுவீகாரம், சுவிகாரம், தத்தெடுத்தல், தனதாக்குதல்
தமிழ் விளக்கம்
தத்தெடுத்தல் என்பது இரத்த உறவு இல்லாத குழந்தை ஒன்றுக்குப் பெற்றோராக (வளர்ப்புத் தந்தை அல்லது தாய்) செயற்படல் ஆகும். இவ்வாறு செய்வதால், தத்தெடுத்த நாள் முதல் குழந்தைக்கு முழுப் பொறுப்பாளி ஆவதுடன், அக்குழந்தையின் உண்மையான பெற்றோருக்கு அக்குழந்தை மேலிருக்கும் உரிமையும் இல்லாமல் செய்யப்படுகிறது. தத்தெடுத்தலைச் சட்டம் மூலம் செய்யும் போதுதான், பிற்காலத்தில் உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளவும், வேறு சிக்கல்களிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும்.
பொதுவாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களே குழந்தைகளைத் தத்தெடுக்கின்றனர். சில வேளைகளில், உடன்பிறந்தோர் பிள்ளைகளைத் தத்தெடுக்கும் வழக்கமும் உண்டு. ஆயினும், பணம்படைத்தோர் சிலர் வசதியற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கும் வழக்கம் உண்டு. சில இடங்களில், ஒரு ஊரைத் தத்தெடுத்தல், பாடசாலையைத் தத்தெடுத்தல் போன்ற வழக்கங்களும் உண்டு. தத்தெடுப்புகளில் 1. மானியத் தத்தெடுப்பு (Subsidized Adoption) 2. சுயாதீனத் தத்தெடுப்பு (Independent Adoption) 3. நிறுவனம் சாராத தத்தெடுப்பு (Gray-market Adoption), 4. சட்டபூர்வமற்ற தத்தெடுப்பு (Black-market Adoption), மற்றும் 5. பிறநாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுத்தல் (Inter-country Adoption) என்று பலவகையுண்டு.

English
Taking a person, usually an infant or child, permanently into one's home and treating the child as though born into the family. A legal as well as a child welfare function and process, adoption includes changes in court records to show the legal transfer of the individual from the birth parents to the adopting parents. Adoption usually gives the individual the same rights of inheritance as birth children, and the adoptive parents the same responsibilities and rights of control as birth parents. See also subsidized adoption, independent adoption, gray-market adoption, black-market adoption, and intercountry adoption.