adrenaline
அண்ணீர் / நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்த உதவும் நாளமில்லாச் சுரப்பி
தமிழ் விளக்கம்
அண்ணீரகச் சுரப்பி (தமிழ் வழக்கு: அட்ரீனல் சுரப்பி அல்லது அதிரீனல் சுரப்பி) என்பது, சிறுநீரகத்தின் மேல் இருக்கும் முக்கோண வடிவிலான நாளமில்லாச் சுரப்பி ஆகும். இவை ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புறத்தில் ஒன்று வீதம் வலது, இடமாக இருபுறமும் அமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புறப் பகுதிக்கு புறணி என்பது பெயர். அட்ரீனல் அகணியிலிருந்து, அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை ஹார்மோன்கள் (இயக்குநீர்கள்) சுரக்கின்றன. புறணியிலிருந்து 'ஸ்டீராய்ட்ஸ்' (Steroids) என்னும் ஹார்மோன்கள் / இயக்குநீர்கள் சுரந்து நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கியப் பணி இழையங்களைத் (தசைகள்) தூண்டுவதும், இதயத் துடிப்பைச் சீரக்குவதும், மனதை உஷார் நிலையில் வைத்திருக்கவும், உடம்பின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக நடைபெறச் செய்வதும் ஆகும். இச்சுரப்பியிலிருந்து ஈத்திரோசன், Progesterone இயக்குநீர்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன. கார்ட்டிசால், எபிநெப்ரின் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ட்டிகோஸ்டெரோய்டுகள், கட்டெகோலமைன்கள் என்பவற்றை உற்பத்தி செய்வதன்மூலம், நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்துவதே இதன் முக்கியப் பொறுப்பு ஆகும்.
English
A hormone secreted by the adrenal glands that mobilizes the body to meet perceived emergency or stressful situations. Adrenaline acts to release sugars from the liver and increase blood volume in the mus-cles to increase strength, stimulate the heart beat, increase mental alertness, and generally prepare the body for extraordinary activity.