ADS
மாற்று விநியோக அமைப்புகள்
தமிழ் விளக்கம்
மருத்துவருக்கோ, மருத்துவமனைகளுக்கோ நேரடியாகவோ அல்லது மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் மூலமாகவோ பணம் செலுத்திச் சேவை பெறும் பாரம்பரியமான ஆரோக்கியப் பராமரிப்பு முறைகளைப் போலல்லாமல், மாற்றுமுறையில் சேவையைப் பெறுவதும், கட்டணம் செலுத்துவதையும் மாற்று விநியோக அமைப்புகள் என்பர். இதன்படி, நிலையான வருடாந்திரக் கட்டணத்தைச் சந்தாவாகப் பெற்றுக்கொண்டு, உறுப்பினர்களுக்கு விரிவான மருத்துவம் சம்பந்தப்பட்ட சேவைகளை, அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவக்குழு வழங்கும். அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்புச் சட்டத்தின் படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பு பிரேரபிக்கும் கட்டணத்தைச் செலுத்தும்போது, அவர்களிடம் அனுப்பப்படும் நோயாளிகளுக்கு சில வரையறைகளுக்குட்பட்டு சிகிச்சை அளிப்பார்கள். இது பொதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து வேறுபட்டிருப்பதால், இதை மாற்று அமைப்பு என்பர்.
English
alternative delivery systems (ADS). A combined health care and financing program. Unlike the traditional method of paying the physician or hospital directly or through third-party payment arrangements, the ADS consumer pays a fixed premium in advance and receives services at nominal or no charge. ADS programs include the health maintenance organization (HMO), independent practice associations (IPAs), health care alliances, preferred provider organizations (PPOs), and primary- care networks. See also managed health care program.