adult

சட்ட வயதை அடைந்த நபர்கள்

தமிழ் விளக்கம்

பெரும்பாலான நாடுகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் சட்ட வயதடைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இது விடலைப் பருவத்துக்குப் பின்னர் வரும் பருவம் இளமைப் பருவமாகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுள்ள பருவம் இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்றுத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது, துணிவு மிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும், ஈடுபாடும் அதிகமாக இருக்கும். இள வயதினர் அதிகம் இருக்கும் நாடுகள், முதியவர்கள் அதிக சதவீத அளவில் வாழும் நாடுகளோடு ஒப்பிடுகையில், அடுத்த சில தசாப்தங்களில், பொருளாதார ரீதியாக முன்னேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது.

English

An individual who has reached the legal age of maturity; in most nations and states this age is 18.