adult antisocial behavior
வயது வந்தவர்களின் சமூக விரோத நடத்தை
தமிழ் விளக்கம்
சகமனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ இழப்பேற்படும்படி கவனக்குறைவாலோ, வேண்டுமென்றோ நடந்துகொள்வதும், ஒரு சமூகம் பொதுவாகப் பின்பற்றும் மதிப்பீடுகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் நடத்தைப்பாங்கு. சமூக விரோத நடத்தை என்பது திருடுதல், போதை மருந்துப் புழக்கம், திட்டமிட்ட குற்றச் செயல்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் செய்யும் முறைகேடுகள் போன்ற நடத்தைகளைக் குறிக்கும். இம்மாதிரியான சமூக விரோதக் குற்றங்களுக்கு மனவியாதி காரணமாக அமைவதில்லை. இது சமூக நன்மை கருதி நடந்துகொள்ளும் சகவாசப்பிரிய (Pro Social) நடத்தையிலிருந்து மாறுபட்டது.
English
An enduring pattern of criminal conduct and other acts that are counterproductive to social norms in a person whose behavior cannot be attributed to a specific and diagnosable mental disorder. This label is often applied to professional thieves, drug dealers, organized crime figures, and white-collar criminals.