adult children of alcoholics (ACOAs)

மது அருந்தும் பழக்கமுடையவரின் வயது வந்த குழந்தைகள்

தமிழ் விளக்கம்

ஆல்ஹாலிக்ஸ் அனானிமாஸ் என்ற அமைப்பைப் போன்று செயல்படும் அமைப்புதான் மது அருந்தும் பழக்கமுடையவரின் வயதுவந்த குழந்தைகள் என்ற அமைப்பும். இந்த அமைப்பும் பன்னிரண்டு படிகள் (Twelve Step program) என்ற வழிகாட்டி முறையையும், பன்னிரண்டு மரபுகள் (Twelve Traditions) என்ற கருத்தையும் முன்வைத்துச் செயல்படுகிறது.
பார்க்க: support system - ஆதரவான அமைப்பு - தனிமனிதர்களுக்கு உணர்வு ரீதியான, தகவல் ரீதியான, பொருள் ரீதியான உதவிகளைக் கரிசனத்துடன் வழங்கும் மக்கள், உதவியாதரங்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சேர்க்கையை ஆதரவான அமைப்புகள் எனலாம். உதவி வேண்டும் போது உதவி செய்யத் தயாராக உள்ள நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், உறுப்பினராக உள்ள அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆதரவான அமைப்புகளில் அடங்குவர்.
codependency - சார்பு நிலை, சார்ந்திருத்தல் - இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ தங்களின் ஆரோக்கியமற்ற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உறவு முறை. உதாரணமாக ஒரு விதவைத்தாயும், அவருடைய மகளும், தாங்கள் பிறரால் உதாசீனப்படுத்தப்படலாம் அல்லது பரிகாசத்திற்குள்ளாகலாம் என்ற பயத்தினடிப்படையில் எப்போதும் உடனிருக்கும் நிலை. இது தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் நம்பிக்கையற்ற தன்மையால் எப்போதும் உடனிருக்கும் நிலை மாதிரியோ, ஒரே மாதிரியான கருத்துத் திரிபு பிணி கொண்டவர்களைப் போலவோ, அல்லது வெளித்தூண்டல்களால் உருவான மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் சார்ந்திருப்பதைப் போன்றதல்ல.

English

People who have been raised in the stressful environments created by parents who abused alcohol or other substances. Many ACOAs share similar emotional disorders, including anxiety, depression, low self-esteem, anger, and their own predisposition toward alcohol abuse and substance abuse. Many ACOAs have found comfort in self-help groups or a support group that exists for them. See also support system and codependency.