adult day care
வயது வந்தோரைப் (முதியவர்களை) பகலில் பராமரிப்பது
தமிழ் விளக்கம்
உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ இயலாத, முக்கியப் பராமரிப்பாளர்களின் தொடர் கவனிப்பு கிடைக்கப்பெறாத முதியவர்களின் சுயபராமரிப்புத் தேவைகளையும், அவர்கள் வாழும் வீட்டையும் பராமரிக்கத் தேவையான பணிகளை அவர்களின் இல்லங்களிலோ அல்லது பகல்நேரப் பராமரிப்பகங்களிலோ வைத்து செய்துதரப்படும் சேவைகள்.
English
Programs that provide personal, social, and homemaker services to adults who are unable to care for themselves when their primary guardians are unavailable. Those most likely to require such care are people with physical and mental disabilities whose caregivers must be away every day for extended periods. Such care may be provided in private homes, nursing homes, and other facilities.