adult foster care
வயது வந்தோரைப் (முதியோரை) பேணுதல் / முதியோருக்கு அனுகூலமாயிருத்தல்
தமிழ் விளக்கம்
தங்களைத் தாங்களே சுயமாகப் பராமரித்துக்கொள்ள இயலாத (உடல் வலுவற்றவர்கள், புத்தி சுவாதீனமற்றவர்கள்) முதியவர்களை பிறர் இல்லங்களில் வைத்துப் பேணும் முறை. இம்மாதிரி முதியவர்களைப் பராமரிக்க முன்வருபவர்கள், தங்கள் இல்லங்களில் தங்குவதற்கு வசதியும், உணவும், அன்றாட வாழ்க்கைச் செயல்களில் உதவியும், மனித சேவைகளுக்கான செயல்திறனாளர்களின் (Human Services Professional) மேற்பார்வையில் / வழிகாட்டுதல்களில் செய்கிறார்கள். அமெரிக்க அரசின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் நலத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் செயல் திறனாளர்கள் மூலமாக இந்த வகையான சேவை வழங்குவதற்கு பொருத்தமான இல்லங்களைத் தேர்வு செய்து, பராமரிப்பு வழங்குபவர்களுக்கான பயிற்சியும், பிற ஆதாரங்களையும் தருவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
English
Residential care programs in the private homes of nonrelatives provided for adults who cannot live independently, including some people with a mental disorder, or mental retardation, and frail elderly people. Caregivers usually provide room and board and assistance in activities of daily living (ADL) in family-like environments, in exchange for a monthly payment, under the supervision of human services professionals. The professionals, who are employed by such organizations as the U.S. Department of Veterans Affairs or local social services agencies, find these homes, match them with appropriate adults in need, and provide ongoing counseling and needed health and community resources.