adult protective services (APS)
வயது வந்தோரைப் (முதியோரை) பாதுகாப்பதற்கான சேவைகள்
தமிழ் விளக்கம்
தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள இயலாதவர்களும், அவ்வாறு கவனித்துக்கொள்ள நெருக்கமானவர்கள் இல்லாதவர்களும், தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்று ஆராய்ந்தறிய முடியாதலால், அவர்கள் எளிதில் பிறரால் இடருக்குள்ளாவதும், பிறர் அவர்களை எளிதில் இடருக்கு உள்ளாக்க முடியுமென்பதாலும், அவர்களுக்கு சமூக, சட்ட, மருத்துவ, தங்குமிட மற்றும் பராமரிப்பு உதவிகளைச் செய்து தருவதே மனித சேவைகளின் உள்ளடக்கம். இதுமாதிரியான சேவைகள் தேவைப்படுபவர்களுக்கு, தேவைப்படும் கால அளவிற்கு வழங்கப்பட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், அவருடைய பொருளாதார வசதி, மற்றும் பிறப்பிடத் தகுதியைக் காரணம் காட்டாமல் செய்துதரப்பட வேண்டும் என்ற அமெரிக்க சட்டவிதி.
English
Human services often including social, medical, legal, residential, and custodial care that may be provided for adults who are unable to provide such care for themselves or who do not have a significant other who might provide it. Such people often are incapable of acting judiciously on their own behalf and, thus, are vulnerable to being harmed by or to inflicting harm on others. In such situations, and typically after a legal decision has been made, the social agency or other care facility provides the relevant service until it is no longer deemed necessary. The 1975 Title XX legislation mandated that APS be provided without regard to a person's financial or residency eligibility.