adultified child
வயதுக்கு மீறி முதிர்ச்சியடைந்த குழந்தைகள்
தமிழ் விளக்கம்
ஒரு குடும்பத்திலுள்ள பெரியவர்கள் பொறுப்பேற்றுச் செய்யும் கடமைகளை, அக் குடும்பத்தின் சமூகப்பொருளாதார, உளவியல் சூழ்நிலை காரணமாக, குழந்தைப் பருவத்திலே செய்யபவர்களைக் குறிக்கும் சொல். குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, வேலைக்குச் சென்று சம்பாதிப்பது, வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கோ அல்லது தனியாக வாழும் பெற்றோருக்கோ ஒத்தாசையாக இருப்பது போன்ற பெரியவர்கள் செய்யும் கடமைகளைக் குறிக்கும்.
English
A youth who, because of the family's relationship patterns, psychopathology, or socioeconomic circumstances, is compelled to assume roles and responsibilities normally reserved for older people. An example is a child who is a primary caregiver for younger siblings as well as meal preparer, housekeeper, and major emotional source of support for a single, working parent.