adventitious disability
எதிர்பாராத / தற்செயலான இயலாமை
தமிழ் விளக்கம்
பிறவியினாலோ, வளர்ச்சிப் பருவங்களாலோ ஏற்படாமல், தற்செயலாகவோ (நோய் மற்றும் விபத்து), தன்னிச்சையாகவோ ஏற்படும் இயலாமை. குழந்தைப் பருவத்தில் (உடல், மன, பாலியல் ரீதியாக) முறைகேடாகக் கையாளப்படுபவர்களுக்கு, வயதிற்கு வந்தபின் செவித்திறன் இழக்கும் நிலை ஏற்படுவதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
English
A condition acquired later in life, such as those caused by accident or disease rather than congenital abnormalities or developmental disabilities. A major cause of adventitious disabilities is child abuse, and hearing impairment is one of the more-common permanent disabilities resulting from child abuse.